விஷால் மேனேஜர் ஹேக் செய்யப்பட்டது குறித்து அவர் மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

Hari Krishna Mobile Hacking : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவருடைய மேனேஜராக பணியாற்றி வருபவர் ஹரி கிருஷ்ணா. இவருடைய கைபேசி தீடீரென மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது‌.

இது குறித்து அவர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஹேக் செய்யப்பட்ட விஷால் மேனேஜரின் கைப்பேசி - மக்களுக்கு அவர் வைத்த கோரிக்கை.!!

அனைவருக்கும் வணக்கம் 🙏🙏,எனது மொபைல் போன் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட சமூக ஊடகக் கணக்குகள் கடந்த இரண்டு மணிநேரமாக ஆன்லைன் மோசடி செய்பவர்களால் ஹேக் செய்யப்பட்டன என்பதையும், பெரும் போராட்டத்திற்குப் பிறகு நான் அதை மீட்டெடுத்ததையும் எனது நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவுவதற்கே எங்களுக்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை. தினமும் இரவில் தூங்க நீண்ட நேரம் ஆகிறது. இப்படியான நிலையில் என்னுடைய மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டது மனிதாபிமானமற்ற செயல் என்று கூறியுள்ளார்.

எனவே யாராவது எனது பெயரை பயன்படுத்தி பணம் கேட்டால் அல்லது என்னை போலவே செய்தியை அனுப்பினால் நீங்கள் அவர்களை நம்பி பகிர்ந்துக் கொள்ளவேண்டாம்.

இந்த மோசடிக் குறித்தும் இதை பற்றியும் நான் சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்துள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிரமங்களுக்கு மன்னிக்கவும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற தேவையில்லாத வாட்ஸ்அப் கால்களை நம்பி ஏமாறாமல் பாதுகாப்பாக இருங்கள் எனவும் கூறியுள்ளார்.