Hardik Pandya
Hardik Pandya

Hardik Pandya – தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து மோசமாகப் பேசியதால் எழுந்த சர்ச்சைக்கு பாண்டியா மன்னிப்பு கோரினார் பாண்டியா.

தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாண்டியா மற்றும் ராகுல் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று கிரிக்கெட்டில் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்? என்பது ஆகும். இதற்கு இருவருமே கோலி என்று பதில் அளித்தனர்.

இதற்கு சமூகவலைத்தளங்களில் பெரும் எதிர்பு ஏற்பட்டது. மேலும் அதே நிகழ்ச்சியில் பெண்களை பற்றி மோசமான கருத்தை கூறி உள்ளார் பாண்டியா.

இதற்கும் சமூக வலைத்தளங்களில் பாண்டியாவிற்கு கடும் எதிர்பு கிளம்பி உள்ளது.

பெண்களுக்கான மீ டூ இயக்கம் பெரியாக வளர்ந்து வரும் நிலையில் பாண்டியா இப்படி பேசி இருக்க கூடாது என்றும் பொது நிகழ்வுகளில் பெண்கலுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் பலர் பதிவிட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து பாண்டியா, தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். தொலைகாட்சி நிகழ்ச்சியில் நான் பேசியதற்கு கிடைத்த எதிர்புகளை பார்த்த பிறகு, என் பேச்சால் எந்த விதத்தாலும் மனம் வருத்தம் அடைந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

யாரையும் மரியாதை குறைவாக பேசவோ அல்லது யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்துவதோ என்னுடைய நோக்கம் இல்லை என்றும் கூறி உள்ளார்.