Harbajan Singh Dance to Vaathi Comming

வாத்தி கம்மிங் பாட்டுக்கு வேற லெவலில் நடனமாடியுள்ளார் ஹர்பஜன் சிங்.

Harbajan Singh Dance to Vaathi Comming : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக வாத்தி கம்மிங் பாட்டுக்கு வேற லெவல் இருக்கும் எனவும் கூறலாம்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த பாட்டுக்கு நடனம் ஆடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்களின் இப்பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

அந்தவகையில் தற்போது கிரிக்கெட் வீரரும் நடிகருமான ஹர்பஜன் சிங் வாத்தி கம்மிங் பாட்டுக்கு வேற லெவல் நடனமாடியுள்ளார். அந்த வீடியோவை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஹர்பஜன் சிங் தற்போது தமிழில் ப்ரெண்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் பிக் பாஸ் பிரபலமான லாஸ்லியா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.