18 வருட வாழ்க்கை வீணாக கூடாது என மீண்டும் தனுஷ் ஐஸ்வர்யாவை சேர்ந்து வாழ சொல்லியுள்ளார் பிரபலம் ஒருவர்.
Harathi About Dhanush Aishwarya Divorce : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரும் இவருடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து அறிவித்திருப்பது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது விவாகரத்து கேட்டு ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்களின் 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக இனி இருவரும் அவரவர் பாதையில் பயணிக்க விரும்புவதாகவும் தனுஷ் தெரிவித்திருந்தார்.
அடடடே.., தங்க நகைகளில் இவ்வளவு Collection-னா.. ஆச்சரியமூட்டும் சரவணா ஸ்டோர்ஸ் Elite Gold..! | TNagar

இந்த நிலையில் தற்போது இவர்களின் விவாகரத்து குறித்து பிரபல நடிகை ஆர்த்தி பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில் 18 வருட அன்பான வாழ்க்கை வீணாக கூடாது எல்லா கருத்து வேறுபாடுகளும் விவாகரத்தில் தான் முடியும் என்பது உண்மை அல்ல. இந்த சின்ன பிரிவும் உங்களை நீங்கள் ஆராய்ந்து, விட்டு கொடுத்து, உங்கள் குழந்தைகளுக்காக இருவரது பாதையும் வெவ்வேறாக ஆகாமல் ஒன்றாகும் என்று நம்புகிறேன். இறைவனை வேண்டுகிறேன் என பதிவு செய்துள்ளார்.
ஆனால் பிரிந்த இருவரும் மீண்டும் ஒன்று சேர்வார்களா என்பது கேள்விக்குறி தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.