Happy Birthday Sai Pallavi - Premam | Fidaa | Maari 2 | Rowdy Baby | Sai Pallavi Phots | Sai Pallavi LifeStyle | NGK Movie

Happy Birthday Sai Pallavi :

வட இந்திய நடிகைகளும் மலையாள நடிகைகளுமே தென்னக அளவில் கோலோச்சி வரும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த நாயகிகள் சொற்ப அளவிலேயே முன்னணி அந்தஸ்தை அடைந்துள்ளனர்.

அந்தவகையில் தமிழகத்தைச் சேர்ந்தவராக இன்று தென்னக அளவில் முன்னணி நடிகையாக வளர்ந்திருக்கிறார் சாய் பல்லவி.

கோயம்பத்தூரை பிறப்பிடமாக கொண்ட சாய் பல்லவி, இயல்பிலேயே நடனம் ஆடுவதில் வல்லவராக இருந்தார்.

முறைப்படி நடனம் பயிலவில்லை என்றாலும் தமிழ், தெலுங்கு தொலைக்காட்சிகளின் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று கவனம் ஈர்த்த அவர், 2015-ம் ஆண்டு வெளியான பிரேமம் மலையாள படத்தின் மூலம் அறிமுகமாகி ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் ஆதர்ச நாயகியாக மாறினார்.

விஜயை ஓவர்டேக் செய்த சூர்யா – இந்தியாவிலேயே இது தான் முதல் முறை.!

பிரேமம் வெற்றியை அடுத்து தெலுங்கில் ஃபிதா படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி அங்கும் ஒரு வெற்றிபட நாயகியாக உருவெடுத்தார்.

எளிமையான தோற்றம், நலினமான நடன அசைவுகள் என தனது திரை ஆளுமையின் மூலம் தெலுங்கு தேசத்திலும் முன்னணி நாயகியாக வளர்ந்தார் சாய் பல்லவி.

மலையாளம், தெலுங்கு என அடுத்தடுத்து வெற்றிகளைக் கொடுத்தாலும் தன் தாய் மொழியில் சாய் பல்லவி அறிமுகமான தியா படம் அவருக்கு போதிய வரவேற்பை பெற்றுத் தரவில்லை.

எனினும் அடுத்து வெளிவந்த மாரி2 படத்தின் ரௌடி பேபி பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கான ரசிகர் வட்டாரத்தை உருவாக்கியது.

தற்போதுவரை 45 கோடிக்கும் அதிகமான வியூஸ் பெற்று தென்னிந்திய அளவில் அதிகமுறை பார்க்கப்பட்ட பாடல் எனும் சிறப்பு அந்தஸ்தையும் ரௌடி பேபி அடைந்துள்ளது.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பதும் சாய் பல்லவியின் வச்சிண்டே பாடல்தான்.

இதன் மூலம் இணையத்தில் தன் பட சாதனையை தானே முறியடிக்கும் அளவு யூ டியூப் சென்சேஷனலாக உருவெடுத்துள்ளார் சாய் பல்லவி.

ஒரு சராசரி குடும்பத்தில் இருந்து வந்து இன்று தென்னகமே திரும்பி பார்க்கும் நாயகியாக உருவெடுத்தது மட்டுமே சாய் பல்லவியின் வெற்றி அல்ல.

தமிழில் காலந்தோறும் கடைபிடிக்கப்படும் நாயகிகளுக்கான பிம்பத்தை உடைத்திருப்பதோடு, அதன் மூலம் எளிமையான தோற்றமே அழகு எனும் நம்பிக்கையையும் ரசிகர்களின் மனதில் விதைத்திருக்கிறார் சாய் பல்லவி.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.