Hanshika Pair With Dhanush After Mappillai

10 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனுஷுடன் ஜோடி சேர உள்ளார் பிரபல நடிகை ஒருவர்.

Hanshika Pair With Dhanush After Mappillai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் தற்போது தனுஷ் 43வது திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கார்த்திக் நரேன் இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தனுஷ் நடிப்பில் தொடர்ச்சியாக அரை டஜனுக்கும் மேலான படங்கள் உருவாக உள்ளது. அதில் ஒன்று தான் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கும் திரைப்படம். இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக 3 நடிகைகள் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

ஃபுட்பால் வெற்றி : கொண்டாட்டத்தில் ஒருவர் பலி, 3 பேர் கவலைக்கிடம்..

அதில் ஒருவராக நடிகை ஹன்சிகா நடிக்கவுள்ளார். பத்து வருடங்களுக்கு முன் இவர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் தனுசுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

BEAST Shooting Spot-டிற்கு விசிட் அடித்த பிரபலம் – விரைவில் பாலிவுட்டில் ரீமேக்! | Vijay, Suriya