சினிமாவை நம்பினால் இனி வேலைக்காகாது என பலூன் பிசினஸில் இறங்கியுள்ளார் ஹன்சிகா என தகவல் வெளியாகியுள்ளது.

Hanshika New Business Details : தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா.

விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.

உடல் எடை கூடிய வாய்ப்பு இல்லாமல் போனதும் தன்னுடைய எடையை குறைத்து மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இவரது நடிப்பில் தற்போது மகா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் முன்னாள் காதலரான சிம்புவும் நீண்ட கெஸ்ட் ரோலில் இணைந்து நடித்து வருகிறார்.

சூரரைப் போற்று படத்தின் மொத்த வியாபாரம் – ரிலீஸுக்கு முன்னரே லாபத்தை அள்ளிய சூர்யா

இருப்பினும் ஹன்சிகாவிற்கு அடுத்தடுத்து எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அவர் புதிதாக பலூன் பிசினஸ் ஒன்றை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிலும், கல்யாண நிகழ்ச்சிகளிலும் அலங்காரம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் பலூன் சார்ந்த பிசினஸ் தான் அது எனவும் கூறப்பட்டது.

ஆனால் ஹன்சிகா இது உண்மை இல்லை என மறுத்துள்ளார். தான் எந்த ஒரு பிசினஸையும் தொடங்கவில்லை என ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.