ஹன்சிகா வீட்டில் திருமண வேலைகள் விறுவிறுப்பாக நடக்க வீடே களைகட்ட தொடங்கியுள்ளது.

Hanshika Brother Marriage : தமிழ் சினிமாவில் தனுஷ்க்கு ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் நடித்து அறிமுகமானவர் ஹன்சிகா. அதன் பின்னர் விஜய், சூர்யா, அதர்வா, சிம்பு, விஷால் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார். தற்போது தன்னுடைய 50-வது படமான மஹா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹன்சிகாவின் முன்னாள் காதலர் சிம்பு நீண்ட நேரம் வரும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

தற்போது ஹன்சிகா பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இப்படியான நிலையில் அவரது வீட்டில் திருமண கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது. ஹன்சிகாவும் திருமண வேலைகளில் பிஸியாகியுள்ளார். மாப்பிள்ளை யார் என்று கேட்காதீர்கள். திருமணம் ஹன்சிகாவிற்கு இல்லை அவரது அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்கு தான்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூரில் இருக்கும் அரண்மனையை 2 நாளைக்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். அங்கு தான் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

களைகட்டும் திருமண வேலைகள்‌‌..  செம பிஸியான ஹன்சிகா - யாருக்கு திருமணம் தெரியுமா??