hand Foot Pain : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

hand Foot Pain :

👌 கைகால் வலி குணமாக சுக்கு, ஆவாரம் பட்டை இரண்டும் சம அளவு எடுத்து சிறிதளவு நீர் விட்டு காய்ச்சி ஆற வைத்து சாப்பிடவும்.

👌 சுண்டை இலையை நன்றாக வதக்கி வேப்ப எண்ணெய் விட்டு கிளறி வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கை கால் வலி குறையும்.

👌 சீந்தில் கொடி இலைகளை பாலுடன் கலந்து சாப்பிட்டு வர கை மற்றும் கால் வலி குறையும்.

👌 கைகால் வலி குறைய தூதுவளை இலையை அரைத்து சிறிதளவு எடுத்து பசும்பாலில் கலந்து சாப்பிடவும்.

காது வலி, காது குத்தல், காது மந்தம் போன்ற அனைத்து காது பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? இதோ, காது வலி குணமாக, சில டிப்ஸ்!.

👌 கை மற்றும் கால் வலி குணமாக நல்லெண்ணையில் மருதாணி இலையை போட்டு காய்ச்சி பூசவும்.

👌 துளசி இலைச்சாறு சிறிதளவு உப்பு கலந்து குடித்தால் கை கால் வலி குணமாகும்.

👌 கை வலி நீங்க சர்க்கரை வள்ளி கிழங்கை தண்ணீரில் அரைத்து பூசவும்.

👌 புங்கன் இலையை ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி கை மற்றும் கால்களில் உள்ள வீக்கத்தின் மீது தடவினால் வலி, வீக்கம் இரண்டுமே குறையும்.

👌 ஒரு கைப்பிடி கடுகைத் தூள் செய்து, திருகு கள்ளிச்சோறு கால் படி எடுத்து நன்கு வதக்கி அதைச் சூட்டுடன் ஒத்தடம் கொடுத்து அதையே வைத்து கட்டி வர வலி குறையும்.

👌 கை கால் உணர்வில்லாமை வேப்ப எண்ணெயில் கட்டி கற்பூரம் ஊற வைத்து தினசரி தேய்த்து வர உணர்வு திரும்பும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here