Hair related problems
Hair related problems

மிகுந்த மருத்துவ குணமிக்க வேப்பிலையை தலைமுடிக்கு பயன்படுத்தினால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

1) வேப்பிலை எண்ணெயைக் கொண்டு தலைமுடியை மசாஜ் செய்து வந்தால், பொடுகை அடியோடு விரட்டலாம்.

2) வேப்பிலை நீரைக் கொண்டு மாதத்திற்கு இரண்டு முறை அலசி வந்தால், முடி பொலிவோடும், பட்டுப் போன்றும் இருக்கும்.

3) வேப்பிலை நீரைக் கொண்டு தலையை அலச தலையில் ஏற்படும் அரிப்பு உடனே அடங்கும்.

4) வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலச ஸ்கால்ப்பில் ஏதேனும் நோய்தொற்றுகள் இருந்தால், விரைவில் போக்கலாம்.

5) ஒரு கையளவு வேப்பிலையை எடுத்துக் கொண்டு, நீரில் பேட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த வேப்பிலைகளை எடுத்து அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி, பல்வேறு முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

6) முட்டையின் வெள்ளைக்கருவுடன் வேப்பிலை பேஸ்ட்டை சேர்த்து, தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து அலச, முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, தலையில் ஏற்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here