Hair falling
Hair falling

Hair falling :

குளிர்காலத்தில் அதிகமாக தலை முடி உதிர்வது ஏன்? தெரிந்து கொண்டு முடியை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

குளிர்காலத்தில் அதிகமாக தலை முடி உதிர்வது ஏன்?

குளிர்காலம் என்றாலே பெண்களுக்கு கூந்தல் பொலிவின்றியும், பளபளப்பு குறைந்தும் காணப்படுமே என்ற கவலையும் நம்மை அழைத்த தொடங்கிவிடும்.

அத்துடன் முடி உதிர்வதும் சேர்ந்து அந்த கவலையை மேலும் அதிகரித்து விடும். அதற்கு சில விஷயங்களைக் கடைப்பிடித்தால் உங்களது கூந்தல் பளபளப்பு இழக்காமல் பாதுகாக்கலாம்.

☆ தினமும் தலைமுடிக்கு நல்ல தரமான பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது முடிக்கு தேவையான வைட்டமின் மற்றும் ஃபேட்டிஆசிட்டுகள்
தந்து விடும்.

☆ குளிர்காலத்தில் தலைமுடிக்கு அடிக்கடி ஷாம்பு போடுவதை தவிர்த்து, பயத்தமாவு பயன்படுத்துவது நல்லது.

☆ குளிரில் இருந்து கூந்தலை பாதுகாக்க மெல்லிய ஸ்கார்பை பயன்படுத்தலாம். ஆனால் அது முடியின் வேர் பகுதியில் ரத்த ஓட்டத்தைக் கட்டுப் படுத்தும் அளவுக்கு இருக்கமாக இருக்கக்கூடாது.

☆ கூந்தலை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களது உடலுக்கு நீர் தேவைப்படுவதைப் போல உங்களது கூந்தலுக்கும் நீர் அவசியம். உங்களது கூந்தலை ஆரோக்கியமாக வைக்க அதிக அளவு நீர் அருந்த வேண்டும்.

☆ முடியை அதிகம் ஸ்டைல் செய்ய வேண்டாம். குளிர்காலத்தில் ஸ்டைலிங்க் கருவிகளான பெயர்கள் டிரையர்கள் மற்றும் கலர்கள் ஆகியவற்றை பயன்படுத்தினால், கூந்தல் மற்றும் ஸ்கால்ப் வறண்டு விடும். முடியை இயற்கையாகவே உலர விடுங்கள்.

☆ முடியை அடிக்கடி குறைத்து கொள்ளுங்கள். இதனால் ஸ்பிளிட் என்ட் (முடி பிளவுபடுதல்) குறைந்து முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

☆ வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும். குளிர்காலம் என்பதற்காக உங்களது கூந்தலை சுடுநீரில் அலசக் கூடாது. வெதுவெதுப்பான நீர் தலைமுடிக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும்.

☆ ஈரக் கூந்தலுடன் வெளியே செல்லாதீர்கள். குளிர்காலத்தில் கூந்தல் உலர அதிக நேரம் ஆகும். ஆனால் குளிர் காற்று அதற்கு உதவாது. வீட்டைவிட்டு வெளியே செல்லும் முன், முடியை இயற்கையாகவே உலர வைக்க வேண்டும்.

☆ வீட்டில் உள்ள பொருட்களான அவகோடா, தயிர், மற்றும் முட்டையின் வெள்ளை கரு கூந்தலுக்கு தேவையான கூடுதல் ஈரப்பதத்தை தரக்கூடிய பொருட்கள் ஆகும்.

☆ புரதம், இரும்பு (கீரைகள்), சிங்க்(நட்ஸ் சிறந்த உணவு) மற்றும் வைட்டமின் சி (சிட்ரஸ் பழங்கள்) நிறைந்த உணவுகளை நன்கு உண்ண வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here