Hair Cut

☆ செவ்வாய் கிழமைகளில் ஆண்கள் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்யவோ கூடாது என்று வீடுகளில் இருக்கும் பெரியவர்கள் ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?

☆ பிறந்த நாள், செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளை தவிர மற்ற நாட்களில் முடி மற்றும் நகத்தை வெட்டலாம்.

● துர்க்கை மற்றும் லட்சுமி தினம்:

☆ இந்த மூட பழக்கத்திற்கு வேறு காரணங்கள் உள்ளன. இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய் கிழமை என்பது துர்க்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. செலவு கூடாது:

☆ செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்கு உரிய நாள் செவ்வாய். இதன் காரணமாக இந்த நாளில் செல்வத்தை வீட்டை விட்டு வெளியேற்ற பெரியவர்கள் மறுத்து வருகிறார்கள்.

☆ நம்மிடம் உள்ள லட்சுமியை தானம் செய்தால், லட்சுமி சென்று விடுவாள் என்ற நம்பிக்கை பண்டைய காலம் முதல் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

●வீட்டை சுத்தம் செய்யமாட்டார்கள்:

☆ எப்படி முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ, நகம் வெட்டவோ கூடாதோ அதேப் போல் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவி விடவோ அல்லது வீட்டில் உள்ள பழைய பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள்.

☆ இப்படி, செய்தால் வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம்மை விட்டு வெளியேறிவிடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணமாம்.

● ஜோதிடம்

☆ இச்செயல்களை செய்தால் அவரது வாழ்நாளில் 8 மாதங்கள் குறைவதாக ஜோதிடம் சொல்கிறது. காரணம், செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் குடி கொண்டிருக்கிறார்.

☆ மனித உடலில், செவ்வாய் இரத்தத்தில் குடியிருக்கிறார். இரத்தத்தில் இருந்து தான் முடி வளர்கிறது. எனவே செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருமாம்.

● செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை விளைவுகள்

☆ நம் உடலின் முடியை சனி நிர்வகிக்கிறது. செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் ஆளுகிறது. உண்மையிலேயே சனி தான் செவ்வாயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது.

☆ ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால் சனி கிரகத்தின் சக்தி குறைந்து பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாகக்கூடும்.

☆ எனவே தான் செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்ட வேண்டாம் என்று சொல்கிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here