விஜய் சேதுபதியுடன் இயக்குனர் எச் வினோத் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

H Vinoth Joins With Vijay Sethupathi : தமிழ் சினிமாவில் சதுரங்கவேட்டை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் வினோத். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை இயக்கினார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தல அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கை இயக்கினார்.

12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு

அதன்பிறகு தல அஜித்தை வைத்து வலிமை என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் தல அஜித் தன்னுடைய அடுத்த படமான தல 61 படத்திற்கு வினோத்தை தான் இயக்குனராக டிக் அடித்துள்ளார். இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

Simbu நடிப்பை பார்த்து கண்டிப்பா அழுவீங்க! – Director Venkat Prabhu Speech | Maanadu Audio Launch

மேலும் தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ள வினோத் விஜய் சேதுபதியை சந்தித்து ஒரு கதையை கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ள படமா? அல்லது தல 61 படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்த முழுமையான தகவல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதால் தான் தெரியும்.