அஜித்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் நடிக்க போகும் மூன்று முன்னணி நடிகர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வினோத். இந்த படத்தை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை இயக்கினார். பிறகு அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படத்தை இயக்கிய வினோத் மூன்றாவது முறையாக அஜித்துடன் கூட்டணி அமைத்து துணிவு படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து வினோத் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டோரை இயக்க இருப்பதாக சொல்லப்பட்டது. இருவரையும் ஒரே படத்தில் வைத்து இயக்க உள்ளார் வினோத். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான நிலையில் தற்போது வினோத் அடுத்ததாக நடிகர் தனுஷ் வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் தெரியவந்துள்ளது. இதற்காக பக்க ஆக்சன் த்ரில்லர் கதை ஒன்றை தனுசுக்கு சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் விரைவில் இந்த படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.