H Vinoth About Valimai

சம்பவம் தரமாய் இருக்கும் என வலிமை படம் பற்றி இயக்குனர் எஸ் வினோத் பதிவிட்டது போல பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

H Vinoth About Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இயக்குனர் வினோத் அவர்கள் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டதால் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்றன. இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் நடந்து முடிந்திருந்த நிலையில் அஜித் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.

இப்படியான நிலையில் வினோத் பெயரில் ட்விட்டர் பக்கத்தில் சம்பவம் தரமாய் இருக்கும் என பதிவு ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இதற்கு நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என மனோபாலாவும் தெரியும் சார் என பதிலளித்துள்ளார்.

ஆனால் உண்மையில் இது இயக்குனர் வினோத்தின் ட்விட்டர் கணக்கு இல்லை. இயக்குனர் வினோத் ட்விட்டர் பேஸ்புக் என எந்த சமூக வலைதளப் பக்கத்தில் இல்லை.

இது அவருடைய பெயரில் இயங்கி வரும் போலி கணக்கிலிருந்து பதிவான பதிவு என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை திரைப்படம் சிறப்பான சம்பவமாக இருக்கும் என்பதில் மட்டும் ஐயமில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.