முதல் பாதி அஜித் பேன்ஸ்க்கு பிடித்த மாதிரி இருக்கும் என இயக்குனர் எச் வினோத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை வலிமை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக வினோத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள திரைப்படம் துணிவு.

முதல் பாதி அஜித் பேன்ஸ்க்கு.. இரண்டாம் பாதி இப்படித்தான் இருக்கும் - துணிவு பற்றி எச் வினோத் அளித்த பேட்டி.!!

இந்த படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் படம் எப்படி இருக்கும் என்பது குறித்து இயக்குனர் தெரிவித்துள்ளார்.

படத்தின் கதை என்ன என்பது ட்ரெய்லரிலேயே சொல்லப்பட்டுள்ளது. ட்ரைலரை உற்று கவனித்தால் கதை புரியும் என பேசிய வினோத் முதல் பாதி ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த மாதிரி இருக்கும் இரண்டாம் பாதியில் எல்லோருக்கும் பிடித்த மாதிரி இருக்கும் என தெரிவித்துள்ளார்.

முதல் பாதி அஜித் பேன்ஸ்க்கு.. இரண்டாம் பாதி இப்படித்தான் இருக்கும் - துணிவு பற்றி எச் வினோத் அளித்த பேட்டி.!!

இதனால் துணிவு திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு ஏற்றார் போல ஆக்சன் படமாக மட்டுமில்லாமல் குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும் இருக்கும் என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.