இரண்டே வார்த்தையில் துணிவு படத்தின் கதையை சொல்லி உள்ளார் எச் வினோத்.

தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் எச் வினோத். இவரது இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு.

மூன்றாவது முறையாக இந்த கூட்டணி அமைந்ததால் படம் எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி உள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்து எச் வினோத் பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.

அதாவது, துணிவு படத்தின் கதை எப்படி இருக்கும் என கேட்டதற்கு, அஜித் வில்லனாக நடித்திருக்கிறார் என்று சொன்னால் மங்காத்தா 2 என பேசி விடுவார்கள். அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருக்கும். சுருக்கமாக சொன்னால் இது அயோக்கியர்கள் ஆட்டம் என கூறியுள்ளார்.

இதனால் படம் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.