H Raja criticized DMK
H Raja criticized DMK

H Raja criticized DMK – மேற்கு வங்கத்தில் சிபிஐ அமைப்புக்கு எதிராக போராடும் மம்தா பானர்ஜிக்கு திமுக ஆதரவு தெரிவித்ததை விமர்சனம் செய்து பாஜகவின் தேசிய செயலாளர் எச் ராஜா கடுமையாக டிவிட்டர் விமர்சனம் செய்துள்ளார்.

மத்திய அரசை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் தர்னா போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த தர்ணா போராட்டம் தொடர்ந்து 2 வது நாளாக நீடித்தும் வருகிறது.

இந்நிலையில் ‘அரசியலமைப்பை காக்க போராடும் மம்தா பானர்ஜியுடன் துணை நிற்போம் என திமுக தலைவர் ஸ்டாலின்,

திமுக எம்பி கனிமொழி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்’.

இதை தொடர்ந்து, திமுகவின் இந்த ஆதரவை கண்டித்து எச் ராஜா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவீட்டில் கூறுகையில் ‘அன்றைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷாஜியை பொய் வழக்கில் கைது செய்தது திமுக, காங்கிரஸ் அரசு தான்.

அன்று இவை அனைத்தையும் செய்த திமுக இன்று இவ்வாறு கூக்குரலிடுகிறது. வெட்கம் கெட்ட திமுக’ என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் எச் ராஜா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here