ஜிவி பிரகாஷ் மற்றும் சீனு ராமசாமி இணைந்துள்ள படத்தின் டைட்டிலுக்கு உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

GVP And SeenuRamasamy Movie Title Look : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சீனு ராமசாமி. தனித்துவமான கிராமத்து கதைகளை படமாக கொடுத்து வருகிறார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளது.

திருப்பதியில்,13 மற்றும் 22-ந்தேதி கருட வாகன சேவை உற்சவம்..

இந்த படத்தினை ஸ்கை மேன் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக கலைமகன் தயாரிக்கிறார். படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் இன்று படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை இன்று மாலை 5 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் வெளியிடவுள்ளார்.

Valimai-யை விடுங்க : சத்தமே இல்லாமல் புதிய சாதனை படைத்த Thala Ajith! | Latest Cinema News

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும இரண்டாவது படமாகும். முதல் படமாக பிக் பாஸ் புகழ் முகேன் ராவ் ஹீரோவாக நடித்துள்ள வேலன் திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.