தளபதி விஜய்க்காக ஹாலிவுட் பட கதையை எழுதி வைத்து காத்திருப்பதாக இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

GVM Wait to Direct Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க நெல்சன் திலிப் குமார் இயக்க உள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் யாருடைய கூட்டணியில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் தளபதி விஜய்க்காக மாஸான ஹாலிவுட் கதை ஒன்றை எழுதி வைத்திருப்பதாக கூறியுள்ளார்.

விஜய் மட்டும் இந்த கதையை கேட்டு ஒகே சொல்லி விட்டால் உடனே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.