GVM Joined in Viduthalai Movie

சூரி, விஜய் சேதுபதியை தொடர்ந்து விடுதலைப் படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார்.

GVM Joined in Viduthalai Movie : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த இவர் அடுத்ததாக விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தில் தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பது இதுவே முதல் முறை என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் கொஞ்சம் கூடியுள்ளது.