GVM in Pathu Thala Movie

பத்து தல படத்தில் சிம்புவுக்கு முன்னணி தமிழ் இயக்குனர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

GVM in Pathu Thala Movie : தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இதற்கு முன்னதாக சுசீந்திரன் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜில்லுனு ஒரு காதல் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக உள்ள பத்து தல என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

இவர்களை தொடர்ந்து தற்போது பிரபல முன்னணி இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் இந்தப் படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்கப் போவதாக தகவல் கசிந்துள்ளது.

தன்னுடைய படங்கள் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்படுவதால் கௌதம் மேனன் கடந்த வருடம் முதல் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

ஓ மை கடவுளே, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ட்ரோன் உள்ளிட்ட படங்களில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

இந்த படங்களை தொடர்ந்து நடிகர் சிம்புக்கு வில்லனாக நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.