GVM About Suriya's Next Movie
GVM About Suriya's Next Movie

சூர்யாவின் அடுத்த படம் பற்றிய செம அப்டேட் ஒன்றை கௌதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

GVM About Suriya’s Next Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப்போற்று என்ற திரைப்படம் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், ஹரி இயக்கத்தில் அருவா, மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு பக்கா கிராமத்து கதை என அடுத்தடுத்து படங்களை கையில் வைத்துள்ளார்.

மேலும் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் கமலும் காதம்பரியும் என்ற படத்தின் கதையை மையமாகக் கொண்டு உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

கவுதம் மேனன் படத்தில் இணையும் கீர்த்தி சுரேஷ்? -அதுவும் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமாம்!

தற்போது பேட்டி ஒன்றில் இப்படம் பற்றி பேசியுள்ளார் கௌதம் மேனன். அதாவது சூர்யா கையில் இருக்கும் படங்களை முடித்துவிட்டு அடுத்ததாக நடிக்கும் படமாக இது இருக்கும் என தெரிவித்துள்ளார்.

படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இசையும் காதலும் கலந்த சிறந்த படமாக இது இருக்கும், படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.