கௌதம் மேனன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கண்டிஷன் போட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சஞ்சய் தத், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் லியோ படத்தின் சூட்டிங் நிறைவு செய்த கௌதம் மேனன் இந்த படம் பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். லியோ படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நிறைவடைந்ததை தொடர்ந்து விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது.

படத்தின் சூட்டிங் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இதைத் தவிர வேறு எதையும் சொல்லக்கூடாது என லோகேஷ் கனகராஜ் கண்டிஷன் போட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.