GVM About Dhruva Natchathiram Release
GVM About Dhruva Natchathiram Release

கிடப்பில் கிடக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்பது குறித்து பேசியுள்ளார் கௌதம் மேனன்.

GVM About Dhruva Natchathiram Release : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் மேனன். இவரது இயக்கத்தில் இறுதியாக என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.

அரசன் சோப் விளம்பரத்தில் நடித்த குட்டி பெண்ணா இது? விஜய் படத்தில் நடித்துள்ளார் – இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.!

தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த நிலையில் ஒரு வழியாக ரிலீஸ் செய்யப்பட்டு விட்டது. ஆனாலும் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இதனை அடுத்து இவர் தற்போது விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படமும் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்து வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் எப்போது ரிலீசாகும் என விக்ரம் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் கௌதம் மேனன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நிச்சயம் துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கூறியுள்ளார்.

ஊரடங்கு முடிந்த பிறகு படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி கூடிய விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்‌.

துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் முதலில் சூர்யா தான் நடிக்க இருந்தார். கௌதம் மேனன் ஆரம்பத்தில் பாதி கதையை மட்டும் கூறிவிட்டு சூர்யாவை நடிக்க அழைத்தால் அவர் நடிக்க மறுத்தார்.

சிம்பு நடித்து இருக்கிறாரா?? சஸ்பென்ஸ் வைக்கும் கௌதம் மேனன் – அப்போ ஏதோ இருக்கு!

இதனால் இவர்களுக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இன்று வரை புதிய படத்திற்காக இணையவில்லை. சூர்யா படத்தை நிராகரித்த பின்னர் தான் இந்த வாய்ப்பு விக்ரமுக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரமின் திரைப்பயணத்தில் துருவ நட்சத்திரம் ஒரு முக்கிய படமாக இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.