தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் குறித்து ஜிவி பிரகாஷ் குமார் பகிர்ந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் வாத்தி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் நடித்துவரும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசிக்கு அருகே உள்ள காட்டு பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்தின் அப்டேட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அது தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

அதில் அவர், கேப்டன் மில்லர் படத்திற்காக மூன்று, நான்கு பின்னணி இசை கம்போஸ் செய்திருக்கிறேன். இவற்றுக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. சிறப்பான பின்னணி இசை வந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.