மாமனிதன் படத்தைத் தொடர்ந்து சீனுராமசாமி இயக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

GV Prakash in Seenu Ramasamy Direction : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சீனு ராமசாமி. தேசிய விருது பெற்ற இயக்குனரான இவர் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மாமனிதன் படத்தைத் தொடர்ந்து சீனு ராமசாமியின் அடுத்த படம் - ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி காயத்ரி நடிப்பில் இசைஞானி இளையராஜா & யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் மாமனிதன் திரைப்படத்தின் பணிகள் முடிந்து அடுத்து ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறேன்.

விராட்கோலி டீம் கொண்டாட்டம் : பிசிசிஐ வெளியிட்ட வீடியோ வைரலானது..

இது இதுவரை வந்த என் படங்களில் சற்று மாறுதலாக ஆக்‌ஷன் திரில்லர்கிராமத்து பின்புலத்தில் அமைந்துள்ள படமாகும்.இதன் படப்பிடிப்பபு அடுத்தமாதம் முதல் வாரத்தில் தேனியில் தொடங்குகிறது. என்.ஆர்.ரகுநந்தன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். இந்த படத்தை ஸ்கைமேன் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில்கலைமகன் முபாரக் தயாரிக்கிறார் என தெரிவித்துள்ளார்.

விரைவில் Sundhara Travels இராண்டம் பாகம்! – Murali – Vadivelu-க்கு பதில் இவர்களா?