Gv Prakash in Hollywood Album Update
Gv Prakash in Hollywood Album Update

Gv Prakash in Hollywood Album Update : புதிய முயற்சி எடுக்கும் போது, சிலர் பக்கபலமாக இருந்தால் கூடுதல் பலம் கிடைத்தது போல் உணர்வோம். ஆனால், திரைத்துறையில் புதிய முயற்சிகள் எடுக்கும் போது “ஏன் இவருக்கு இந்த வேலை” என்று பேசுவதற்கே பலர் இருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே புதிய முயற்சிக்கு நாங்கள் கைக் கொடுக்கிறோம் என்பார்கள். அப்படியொரு கூட்டணி இப்போது அமைந்திருக்கிறது.

‘அசுரன்’, ‘சூரரைப் போற்று’ என்று தொடரும் ஜி.வி.பிரகாஷின் இசைப் பாய்ச்சல் அடுத்தது ஹாலிவுட் பக்கம் திரும்பியிருக்கிறது. ஆம், ஆங்கிலத்தில் ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளார் உலக இசைக் கலைஞர்கள் மத்தியில் தனது தடத்தை வலுவாக பதிப்பார் என்று உறுதியாக நம்பலாம். ‘கோட் நைட்ஸ்’ என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பத்தில், ‘ஹை அண்ட் ட்ரை’ என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்தப் பாடல் செப்டம்பர் 17-ம் தேதி வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷின் இந்த ஹாலிவுட் பாய்ச்சலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தனுஷ் இணைந்துள்ளனர். ஆம்ல், 17-ம் தேதி இந்தப் பாடலை இருவரும் வெளியிடவுள்ளனர். இவர்கள் மட்டுமல்ல, பல்வேறு முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் ஜி.வி.பிரகாஷுக்காக ஒன்றிணைகிறார்கள். ஒவ்வொருவருடைய பெயராக அறிவிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

மாஸ்டர் Album படைத்த Mega சாதனை – கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்..!

இந்தப் பாடல் ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது. இரண்டு விதமான உலகத்தின் கலவை இந்தப் பாடல். ஹை அண்ட் ட்ரை, ஜிவி பிரகாஷின் முதல் ஆங்கிலத் தனிப்பாடல். ஜிவி மற்றும் ஜூலியா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கான ப்ரோக்ராமிங் மற்றும் அரேஞ்மென்ட் (Programming and Arrangement) இரண்டையும் ஜிவி செய்துள்ளார்.

எலக்ட்ரானிக் பாப் வகை பாடலான இது காதலர்களுக்கு இடையேயான மனமுறிவில் இருக்கும் உணர்ச்சிகளுக்குள் ரசிகர்களை இழுத்துச் செல்லும். ஒரே நேரத்தில் காதலனின் அரவணைப்பிலும் அதே நேரம் குளிர்ச்சியான இரவில் தனிமையில் இருப்பது போலவும் பிரிந்து சென்ற காதலர்களுக்குள் இருக்கும் குழப்பத்தை உருவகப்படுத்திச் சொல்கிறது இந்தப் பாடல்.

இந்தப் பாடல் ஜிவி பிரகாஷின் சொந்த ஸ்டூடியோவில், ஜெஹோவாசன் அல்காரால் கலவை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்பக் கலைஞர் ராண்டி மெரில் பாடலை மாஸ்டரிங் செய்துள்ளார். இவர் அடெல், டெய்லர் ஸ்விஃப்ட், கேடி பெர்ரி, மரூன் 5 உள்ளிட்ட பல சர்வதேச இசைக் கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.