அண்ணா எக்ஸாம் பீஸ் கட்டணும் என உதவி கேட்ட கல்லூரி மாணவிக்கு உடனடியாக உதவியுள்ளார் ஜிவி பிரகாஷ்.

தமிழ் சினிமாவில் பாடகர், இசையமைப்பாளர் என பன்முக திறமைகளோடு பயணத்தை தொடங்கியவர் ஜிவி பிரகாஷ். அதன்பிறகு இவர் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

எக்ஸாம் பீஸ் கட்டணும் என உதவி கேட்ட கல்லூரி மாணவி.. ஜிவி பிரகாஷ் செய்த வேலைய பாருங்க - வைரலாகும் பதிவு

தற்போது வரை டஜன் கணக்கில் கையில் படங்களை வைத்துக் கொண்டிருக்கிறார். அதே சமயம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தொடர்ந்து சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகிறார். தன்னால் முடிந்த அளவிற்கு ஏழை எளிய மக்களுக்கு உதவியும் செய்து வருகிறார்.

இப்படியான நிலையில் இவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றின் கீழ் கும்பகோணத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் எக்ஸாம் தொடங்கிடுச்சு, ஃபீஸ் கட்டணும் என சொல்லி உதவி கேட்டுள்ளார். இதனைப் பார்த்த ஜிவி பிரகாஷ் உடனடியாக அந்த பெண்ணின் google பே நம்பருக்கு எக்ஸாம் பீஸ்க்கு தேவையான தொகையை அனுப்பி வைத்துள்ளார்.

பிறகு ட்விட்டர் பக்கத்தில் அமௌன்ட்டை உங்களுக்கு அனுப்பி விட்டேன் என தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜிவி பிரகாஷ் செய்த உதவியை பாராட்டி வருகின்றனர்.

எக்ஸாம் பீஸ் கட்டணும் என உதவி கேட்ட கல்லூரி மாணவி.. ஜிவி பிரகாஷ் செய்த வேலைய பாருங்க - வைரலாகும் பதிவு