Gv Prakash Bike Ride Video

விஜய் டிவி பிரபலத்துடன் பைக்கில் அமர்ந்து ஹாயாக ரைட் செய்யும் ஜிவி பிரகாஷின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

Gv Prakash Bike Ride Video : தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் இசையமைத்து வரும் திரைப்படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்து வருகின்றன. அதே சமயம் நல்ல நல்ல கதைகளாக ஒன்று தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக கிட்டத்தட்ட 11 படங்கள் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் அறிமுக இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் வணக்கம் டா மாப்ள என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் டிவி பிரபலத்துடன் ஹாயாக பைக்கில் செல்லும் ஜிவி பிரகாஷ் - இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!

இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜிவி பிரகாஷ் விஜய் டிவி பிரபலமான தீனா மற்றும் இன்னொருவருடன் பைக்கில் ஹாயாக ட்ரிபிள்ஸ் ரைட் சென்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.