GV Prakash About Vijay Vetri Combo
GV Prakash About Vijay Vetri Combo

விஜய் வெற்றிமாறன் கூட்டணியில் படம் உருவாவது எப்போது என்ற முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.

GV Prakash About Vijay Vetri Combo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

இப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடங்கி தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் இவர் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

ஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து(Opens in a new browser tab)

இந்த நிலையில் தற்போது வெற்றிமாறன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் ஜிவி பிரகாஷ் இவர்கள் இணைய உள்ள படம் பற்றி பேசியுள்ளார்.

டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் உரையாடிய ஜிவி பிரகாஷிடம் தளபதி ரசிகர் ஒருவர் விஜய், வெற்றிமாறன் படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். நிச்சயம் இந்த கூட்டணியில் நீங்கள் இல்லாமல் இருக்க மாட்டீர்கள். இந்த படம் பற்றி அப்டேட் ஏதாவது சொல்லுங்கள் என கேட்டிருந்தார்.

அதற்கு ஜிவி பிரகாஷ் இருவரும் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளனர். ஆனால் இவர்களுக்கு டைமிங் தான் இன்னும் செட்டாகவில்லை. நிச்சயம் இப்படம் தமிழ் சினிமாவில் வரவேற்கக்கூடிய ஒரு படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதோ அந்த வீடியோ