வணங்கான் படம் பற்றி ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார்.

பாலா இயக்கும் வணங்கான் படம் என்னதான் ஆச்சு?? ஜிவி பிரகாஷ் கொடுத்த தரமான அப்டேட் - தீயாக பரவிய ட்வீட்

அதோடு சிறுத்தை சிவா இயக்கும் சூர்யா 42 என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் தற்போது ஜீவி பிரகாஷ் வணங்கான் படம் பற்றி ஒரு அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுவரை இந்த படம் பற்றி எந்த தகவலும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் ஜிவி பிரகாஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படத்தின் பாடல் ரெக்கார்டிங் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பாலா இயக்கும் வணங்கான் படம் என்னதான் ஆச்சு?? ஜிவி பிரகாஷ் கொடுத்த தரமான அப்டேட் - தீயாக பரவிய ட்வீட்

இதோ அந்த பதிவு

வணங்கான் படத்தை தொடர்ந்து சூர்யா 42 படத்தின் நடித்து முடிப்பார். அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படம் ஞானவேல் இயக்கத்தில் உருவாக உள்ள படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.