GV Prakash About Thala 61

அஜித் மற்றும் சுதா கொங்கரா ஆகியோர் இணைவது பற்றி ஜிவி பிரகாஷ் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

Gv Prakash About Thala 61 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து

இந்த படத்தை தொடர்ந்து இவர் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கியுள்ள சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இப்படம் பற்றிய கேள்விக்கு ஜிவி பிரகாஷ் லைவ் வீடியோ ஒன்றில் பதிலளித்துள்ளார். அஜித்துடன் கிரீடம் படத்தில் இணைந்து பணியாற்றியது குறித்து பேசிய அவர் அஜித், சுதா கொங்கரா இணையும் படம் பற்றியும் பேசியுள்ளார்.

கடைசி 5 படங்களுக்கு அஜித் வாங்கிய சம்பளம்??

அதாவது இது செம மாஸான கதை. இந்த கூட்டணி அமைந்தால் நிச்சயம் தமிழ் சினிமா கொண்டாடும் படமாக இருக்கும். மிகப்பெரிய ஆக்சன் திரைப்படம் ஆக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

சுதா கொங்கரா இந்த படத்தின் கதையை என்னிடம் கூறினார். மிக அருமையாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.