ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்திருக்கும் ட்விட்டர் பதிவுகள் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோலிவுட் திரை உலக்கில் மாபெரும் பிரபல முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜீவி பிரகாஷ் குமார். தனது இசையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருக்கும் இவர் தற்போது இசையமைப்பாளராக மட்டுமின்றி கதாநாயகனாக டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, பேச்சுலர், ஜெயில் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் பெற்றுள்ளார்.

மேலும் பல படங்களில் நடித்து வரும் ஜிவி பிரகாஷை தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக திகழும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வம்பு இழுக்கும் விதமாக ட்வீட் செய்துள்ளார். அதில் அவர், “அன்பான ஜிவி பிரகாஷ், நீங்க எவ்வளோ பெரிய மியூசிக் டைரக்டர்.. அந்த சவுண்ட கேட்டா உங்களுக்கு கோபம் வருமாமே” என்று பதிவிட்டுள்ளார்.

அதற்கு ஜிவி பிரகாஷ் அவர்களும், “டியர் ஐஷு, அந்த சவுண்டு மியூசிக் இல்லமா நாய்ஸ் !! ” என்று பதிவிட்டிருக்கிறார். இவர்களது இந்த பதிவுகள் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியதோடு இணையத்தில் வைரலாகியும் வருகிறது.