விஜய் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் படம் தொடங்குவது எப்போது என ஜிவி பிரகாஷ் மாசான அப்டேட்ஸை கொடுத்துள்ளார்.

GV About Vijay and Vetrimaran Combo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். எப்படித் தொடர்ந்து பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார் அதேபோல் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்திற்கும் இவர்தான் இசையமைக்கவுள்ளார்.

விஜய், வெற்றிமாறன் படம் தொடங்குவது எப்போது? - ஜிவி பிரகாஷ் கொடுத்த மாஸ் அப்டேட்

இவர் சமீபத்தில் லைவ் சேட்டில் ரசிகர்களுடன் உரையாடிய போது ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். சுதா கொங்கரா அஜித் கூட்டணி குறித்து கேட்டதற்கு இந்த கூட்டணி விரைவில் சேரும் என தெரிவித்திருந்தார். அஜித்துக்காக சூப்பரான கதை சுதாவிடம் உள்ளது என தெரிவித்திருந்தார்.

விஜய், வெற்றிமாறன் படம் தொடங்குவது எப்போது? - ஜிவி பிரகாஷ் கொடுத்த மாஸ் அப்டேட்

அதேபோல் நீண்ட நாளாக எதிர்பார்க்கப்படும் விஜய் வெற்றிமாறன் கூட்டணி எப்போது அமையும் என கேட்டதற்கு இருவருமே அவர்கள் கமிட்டான படங்களில் பிஸியாக பணியாற்றி வருகின்றனர். காலமும் நேரமும் அமைந்தால் நிச்சயம் இந்த கூட்டணி உருவாகும். இவர்கள் இருவரும் இணையும் படம் யாரும் எதிர்பாராத வகையில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.