இந்தியன் 2 படத்தில் விவேக்குக்கு பதிலாக நடித்து இருப்பவர் யார் என்பது தெரியவந்துள்ளது.

Guru Somasundaram in Indian 2 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தற்போது இந்தியன் 2 மற்றும் விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாக்கி வருகின்றன. பல வருடங்களுக்கு பிறகு பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

இந்தியன் 2 படத்தில் விவேக்குக்கு பதிலாக நடித்திருப்பவர் யார் தெரியுமா?? சூப்பரான நடிகரை தேர்வு செய்த படக்குழு

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து அதை எல்லாம் தாண்டி படமாகி வருகிறது. முதலில் காஜல் அகர்வால் இந்த படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமான நிலையில் திருமணத்திற்குப் பிறகு அவர் கர்ப்பம் ஆகி விட்டதால் இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டதால் அவருக்கு பதிலாக தமன்னா நடித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

விருதுகளை அள்ளிக்குவித்து சாதனை படைத்த திரைப்படம் – Sakkarai Thukkalai Oru Punnagai

இந்தியன் 2 படத்தில் விவேக்குக்கு பதிலாக நடித்திருப்பவர் யார் தெரியுமா?? சூப்பரான நடிகரை தேர்வு செய்த படக்குழு
முருகனின் வடிவங்களும், வழிபாட்டுப் பலன்களும்.!

அதேபோல் நடிகர் விவேக் இந்த படத்தில் ஒப்பந்தமாகி சில காட்சிகளில் நடித்திருந்த நிலையில் திடீரென அவர் உயிர் இழந்து விட்ட காரணத்தினால் அவரது காட்சிகளை அப்படியே முடித்து விடலாமா அல்லது அவருக்கு பதிலாக வேறொரு நடிகரை நடிக்க வைக்கலாமா என படக்குழு ஆலோசித்து வந்தது. அதன்பிறகு விவேக் கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழு குரு சோமசுந்தரம் அவர்களை தேர்வு செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஜோக்கர் என்ற படத்தில் நாயகனாக நடித்து இருந்தவர் தான் குரு சோமசுந்தரம். அவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடிக்க இருப்பதாக வெளியான தகவலை கேட்ட ரசிகர்கள் விவேக் அவர்களின் கதாபாத்திரத்திற்கு நல்ல தேர்வு என கூறி வருகின்றனர்.