Gurkha Movie Review : Plus and Minus of Ghurkha.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Yogi Babu | Trending Cinema News
சாம் ஆண்டன் இயக்கத்தில் 4 மங்கீஸ் ஸ்டூடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் யோகி பாபு, ராஜ் பரத், எலிசா, சார்லி, ஆனந்த ராஜ் என மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள ததிரைப்படம் தான் கூர்க்கா.

Gurkha Movie Review :

படத்தின் கதைக்களம் :

கூர்கா பரம்பரையை சேர்ந்த யோகி பாபு போலீசாக வேண்டும் என்ற ஆசையில் அதற்கான முயற்சியில் இறங்குகிறார். ஆனால் உன் முகத்துக்கும் உடம்புக்கும் அதெல்லாம் சரி வராது என துரத்தி விட்டு விடுகின்றனர்.

அதன் பின்னர் கூர்க்காவான தன்னுடைய தாத்தாவின் வரலாற்றை தெரிந்து கொண்டு தானும் ஒரு காவலாளியாக வேண்டும் என்று ஆசையை மாற்றி கொண்டு ஒரு செக்கியூரிட்டி சர்வில் கம்பெனியின் வேளையில் சேர்கிறார்.

அதன் பின்னர் சென்னையில் உள்ள மிக பெரிய மாலில் இவருக்கு செக்கியூரிடியாக பணி புரிகிறார். சார்லியும் இவருடன் வேலை செய்கிறார்.

திடீரென ஒரு நாள் தீவிரவாத கும்பல் ஒன்று இந்த மாலிற்குள் புகுந்து விடுகிறது. இவர்களிடம் இருந்து யோகி பாபு மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் இப்படத்தின் காமெடி கலந்த கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

நடிகர் நடிகைகளின் நடிப்பு :

யோகி பாபுவின் காமெடி முதல் பாதியில் பக்காவாக ஒர்க் அவுட் ஆகவில்லை, கொஞ்சம் போரடிக்க தான் வைக்கிறது.

அதன் பின்னர் இரண்டாம் பாதியில் சரியாக பிக்கப் செய்து கொண்டு சென்று விடுகிறார். சார்லி ஆகியோர் அவர்களது கதாபாத்திரங்களை சரியாக செய்து முடித்துள்ளனர்.

தொழில் நுட்பம் :

இசை :

ராஜ் ஆர்யனின் பின்னணி இசை பரவாயில்லை, பாடல்கள் எதுவும் பெரியதாக கவரவில்லை.

ஒளிப்பதிவு & எடிட்டிங் :

சதிஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. ரூபனின் எடிட்டிங் கனகச்சிதமாக அமைந்துள்ளது.

இயக்கம் :

இயக்குனர் சாம் ஆண்டன் இந்த படத்தை காமெடி படமாக இயக்கியுள்ளார். முதல் பாதியில் படம் போரடிப்பது போல சென்றாலும் இரண்டாம் பாதியில் யோகி பாபுவின் அல்டிமேட்டான காமெடிகளால் படத்தை கொண்டு சென்று விட்டார்.

தம்ப்ஸ் அப் :

1. யோகி பாபுவின் காமெடி
2. படத்திற்காக யோகி பாபு நடித்துள்ள சில ரிஸ்க்கான காட்சிகள்

தம்ப்ஸ் டவுன் :

1. முதல் பாதியில் மட்டும் சிரிக்கும் படியான காமெடிகள் அமைந்திருந்தால் படம் சிறப்பாக இருந்திருக்கும்.

YouTube video

REVIEW OVERVIEW
கூர்க்கா விமர்சனம்.!
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
gurkha-movie-reviewமொத்தத்தில் கூர்க்கா முதல் பாதியில் போர் அடித்தாலும் இரண்டாம் பாதி சூப்பர். யோகி பாபுவின் காமெடிக்காக ஒரு முறை பார்க்கலாம்.