Green Chilli Uses
Green Chilli Uses

Green Chilli Uses

🌶 நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் பொருட்களில் ஓன்று பச்சை மிளகாய்.
பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் கேப்சைசின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

பச்சை மிளகாயில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைக்க உதவும். சிலர், ஐயோ பச்சைமிளகாய் காரமாய் இருக்கே என்று ஒதுக்குவது உண்டு.

நன்மைகள்:

🌶பச்சை மிளகாயை நன்கு மென்று சாப்பிட்டால் வாயில் உமிழ் நீர் அதிகம் சுரக்கும். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும்.

🌶 பச்சை மிளகாயில் விட்டமின் சி அதிகம். இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திடும், நோய்த் தொற்று பரவாமல் காத்திடும். இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க பச்சை மிளகாய் உதவுகிறது.

🌶 பச்சை மிளகாயை உட்கொண்டால், நுரையீரல் புற்றுநோயினால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கலாம்

🌶 பச்சை மிளகாயில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு சத்து அதிகம் இருப்பதால் சீரான இதய துடிப்பிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது.

🌶 சர்க்கரை நோய் இருப்பவர்கள் பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாத்திடும்.

🌶 பச்சை மிளகாயில் சிலிகான் சத்து அதிகம் இருப்பதால் தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி முடி உதிர்வதை குறைக்க உதவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here