பிக் பாஸ் சீசன் 5ல் இவர் பங்கேற்க போவதில்லை என கூறியுள்ளார் பிரபல நடிகர்.

Gp Muthu Clarify on Bigg Boss 5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளது.

உயரிய நிலையை அடைய, ஒரு மந்திரம் சொல்கிறேன்.!

விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. இது போட்டியாளராக யார்யார் பங்கேற்பார்கள்? பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் டாஸ்க் என்னவெல்லாம் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்குநாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது.

Annaatthe முதல் Beast வரை..? Sun Pictures தயாரிக்கும் படங்களின் RELEASE தேதி – வெளியான முழு விவரம்.!

மேலும் இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களில் ஒருவராக டிக் டாக் மூலம் பிரபலமான ஜி பி முத்து கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஜி பி முத்து ஸ்டைலில் விஜய் டிவி ஒரு ட்வீட்டை பதிவு செய்யவே அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை உறுதி எனவும் பேசப்பட்டது.

ஆனால் தற்போது ஜி பி முத்து இது குறித்து விளக்கமளிக்கையில் நான் bigboss5-ல் பங்கேற்கப் போவதில்லை என கூறியுள்ளார். இதனால் ஜி பி முத்துவை பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதிர்ப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.