GP Muthu about Valimai

ஜிபி முத்துவிடம் வலிமை அப்டேட் பற்றி கேட்டுள்ளனர் தல ரசிகர்கள்.

GP Muthu about Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.

H வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் தொடங்கி ஒன்றரை வருடம் ஆகியும் படக்குழு எந்த ஒரு அப்டேட்டும் வெளியிடவில்லை.

இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்து வந்தனர்.

சிலர் தமிழக முதல்வர் முதல் தமிழ் கடவுள் முருகன் வரை அனைவரிடமும் வலிமை அப்டேட்டை கேட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து டிக் டாக்கில் நடித்து பிரபலமான ஜிபி முத்துவிடம் வலிமை குறித்த அப்டேட்டை கேட்டுள்ளனர்.

இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.