உடல் நலக் குறைபாடு காரணமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்காத ஜி பி முத்து அடுத்த கட்ட முடிவு குறித்து பேசி உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் புதிய கோமாளிகளாக பலர் பங்கேற்று வரும் நிலையில் அவர்களில் ஒருவராக ஜி பி முத்துவும் கலந்து கொண்டு வருகிறார். இவர் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வார எபிசோடில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

இதனிடையில் வரும் நாட்களில் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியிலாவது பங்கேற்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த சமயத்தில் ஜிபி முத்து வீடியோ ஒன்றின் மூலம் இது குறித்து பேசி உள்ளார்.

அதாவது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டாலும் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். இந்த மாத இறுதியில் சூட்டிங்கில் பங்கேற்பேன் என தெரிவித்துள்ளார்.