gowtham menon joined vetrimaaran movie

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

gowtham menon joined vetrimaaran movie :தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றி மாறன். பொல்லாதவன் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் இயக்குனராக அடியெடுத்து வைத்த இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் அசுரன்.

அசுரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலைத் தமிழில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் கௌதம் மேனன் தற்போது நடிகர் அவதாரம் எடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.