கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மூன்று மடங்காக அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Govt School Admission Details of Tamilnadu : தமிழகத்தில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது.

தற்போது கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் தமிழக அரசு மக்களின் நலனுக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப் படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இதற்காக அனைத்து மாணவர்களுக்கும் இலவச சீருடை, புத்தக பை, புத்தகங்கள், நோட்டுகள், காலணி, தினம் ஒரு முட்டை, தினம் ஒரு தானியம், இலவச மிதிவண்டி, இலவச மடிக்கணினி, சிறந்த கல்வி என எண்ணிலடங்கா திட்டங்கள் மாணவர்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக பள்ளிகளில் ஜோராக நடக்கும் மாணவர் சேர்க்கை.. இதுவரை அரசு பள்ளிகளில் மட்டும் எவ்வளவு பேர் சேர்ந்துள்ளனர் தெரியுமா?

இதன் விளைவாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி வரை தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

செப்டம்பர் மாதம் இறுதிவரை மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதால் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை 15 லட்சத்தை தாண்டும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.