Govind Vasantha
Govind Vasantha

Govind Vasantha : திருமணத்திற்கு பிறகு நீண்ட காலம் ஓய்வில் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்தார்.

அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவரும் அவர் இதில் பெரும்பாலும் நாயகி சார்ந்த படங்களிலேயே நடிக்கிறார்.

அந்தவகையில் அடுத்ததாக குலேபகவாலி இயக்குனர் கல்யாணின் இயக்கத்தில் ஜாக்பாட் படத்தில் நடித்துள்ளார்.

தளபதியா? யாரு அது? அஜித் பட நாயகி பதிலால் கொந்தளிப்பில் விஜய் ரசிகர்கள்.!

35 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜோதிகாவுடன் ரேவதி, ஆனந்த்ராஜ், யோகிபாபு, மன்சூர் அலிகான் என ஒரு பட்டாளமே நடித்துள்ளனர்.

சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இதுபோக இரண்டு புதுமுக இயக்குனர்களின் படங்களிலும் ஜோதிகா நடித்து வருகிறார்.

இதில் ஒரு படத்தை ஃபெட்ரிக் இயக்குகிறார். இப்படத்திற்கு 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைப்பார் என தகவல் கசிந்துள்ளது.

96 படத்தின் வெற்றிக்குப் பிறகு சீதக்காதி, உறியடி 2 என அடுத்தடுத்து பல படங்களில் கோவிந்த் வசந்தா பணியாற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here