Government Notice
Government Notice

Government Notice – சென்னை: வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்களுக்கு பதிலாக தற்சமயம், 7,500 ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் புதிய ஆசிரியர்கள் இன்றில் இருந்து நியமிக்கப்பட உள்ளனர் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஊதிய உயர்வு மற்றும் பல அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தற்போது ஆசிரியர்கள் எல்லோரும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள்.

இருப்பினும், இவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. மேலும் இது தொடர்பாக முறையான பேச்சுவார்த்தையும் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டது.

அதில் தெரிவித்திருப்பது: ‘ஆசிரியர்கள் எல்லோரும் பணிக்கு திரும்பவில்லை என்றால் உடனடியாக வேறு நபர்கள் அந்த பணியில் தற்காலிகமாக வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் ‘ என்று தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்களுக்கு பதிலாக 7,500 ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் புதிய ஆசிரியர்கள் இன்றில் இருந்து நியமிக்கப்பட உள்ளனர்.

உடனே இந்த தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது!!

மேலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்பதால் இந்த தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவித்து இருக்கிறது.

வரும் ஜனவரி 28-ஆம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்றும் அரசு தெரிவித்து இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here