பள்ளியில் படிக்கும்போது பாலியல் தொல்லை எனக்கு ஏற்படவில்லை என தீயாக பரவிய தகவலுக்கு 96 ஜானு விளக்கமளித்துள்ளார்.

Gouri Kishan About PSBB Controversy : தமிழகத்தில் சேஷாத்திரி பள்ளியில் பணிபுரிந்து வந்த ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக பரபரப்பு புகார் எழுந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பள்ளியில் படிக்கும்போது பாலியல் தொல்லை எனக்கில்லை - தீயாக பரவிய தகவலுக்கு 96 ஜானு விளக்கம்.!!

திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த சம்பவம் குறித்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நான் அடையாறு பள்ளியில் படிக்கும்போது ஜாதியை வைத்தும் உடல் அமைப்பை வைத்து கேலி கிண்டல்கள் அதன் பின்னர் மாணவர்களின் மீது பழி போடுதல் என பல கசப்பான சம்பவங்கள் நடந்துள்ளன. அது நினைத்தால் தற்போது மனசு பாரம் ஆகிறது என கௌரி கிஷன் கூறியிருந்தார்.

இவர் கூறியதை அடுத்து பலரும் கௌரி கிஷன் பாலியல் தொந்தரவிற்கு ஆளானதாக செய்தியை வெளியிட தொடங்கினர். இந்த நிலையில் தற்போது இது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். நான் பதிவு செய்த பதிவு வேறு ஒருவரை பற்றியது. நான் படிக்கும் போது பாலியல் தொந்தரவுக்கு ஆளாகவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.