Gopi

Gopi Troll Video : நானும் ரவுடி படத்தின் ஒரு காட்சி கோபி வெர்ஷன் என்ற பெயரில் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் மெட்டி ஒலி, நாதஸ்வரம் ஆகிய மெகா ஹிட் சீரியல்களை இயக்கி இருந்தவர் திருமுருகன்.

இவர் தற்போது இதே சேனலில் கல்யாண வீடு என்ற பெயரில் சீரியல் ஒன்றை இயக்கி நடித்து வருகிறார்.

சீரியல் நன்றாக இருந்தாலும் திருமுருகன் உட்பட அனைவரும் ஓவர் ஆக்டிங் கொடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட இதனால் கோபியை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வந்தனர். அதில் இருந்து தினம் தினம் ஏதாவது ஒரு விதத்தில் கோபியை கலாய்த்து விடுகின்றனர்.

இந்நிலையில் தற்போது நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதி நயன்தாராவிடம் பேசும் வசனங்களுக்கு கோபி நடித்தால் எப்படி இருக்கும் என்பது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நெட்டிசன் ஒருவர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.