
மாடர்ன் கேர்ளாக மாறிய பாக்கியா மீது தோல் மேல் கை போட்டு ஜோடி சேர்ந்துள்ளார் கோபி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி பாக்யாவை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது படாத பாடு பட்டு வருகிறார்.

ராதிகாவை விட பாக்கியாவே மேல் என பல நேரங்களில் புலம்பும் அளவுக்கு கோபியின் நிலைமை மோசம் ஆகிவிட்டது.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சதீஷ் தற்போது தண்ணீர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்கியவுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
மாடர்ன் கேர்ளாக மாறிய பாக்யாவின் தோள் மீது கை போட்டு ஜோடியாக எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டு அழகே உன்னை ஆராதனை செய்கிறேன் என கவிதையாக பதிவு செய்து பாக்யாவின் அழகை வர்ணித்துள்ளார்.

இதையெல்லாம் ராதிகா பார்த்தா என்ன ஆகிறது என ரசிகர்கள் கோபியை கலாய்த்து வருகின்றனர்.