மணக்கோலத்தில் கோபி மற்றும் ராதிகா இருக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Gopi and Radhika Marriage Photo Trolls : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்யாவுக்கு தெரியாமல் ராதிகாவுடன் தொடர்பில் இருந்து வருகிறார் கோபி.

எப்போது பாக்கியாவிடம் சிக்குவார் அதன்பிறகு கதைக்களத்தில் என்னவெல்லாம் மாற்றம் ஏற்படப் போகிறது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கேற்றார்போல ராதிகாவின் அம்மா சீக்கிரம் பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்ளுமாறு நச்சரித்து வருகிறார்.

இப்படியான நிலையில் தற்போது ராதிகா மற்றும் கோபி இருவரும் மணக்கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று எடிட் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் எடிட்டிங்னாலும் ஒரு நியாயம் வேணா வா என பங்கமாக கிண்டலடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.