Google Kuttappan Movie Update

தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து நடித்து வரும் கூகுள் குட்டப்பன் திரைப்படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

Google Kuttappan Movie Update : தமிழ் சினிமா பிரபல நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தர்ஷன் மற்றும் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போது அண்ணன் தங்கையாக பழகி வந்த தர்ஷன் மற்றும் லாஸ்லியா ஜோடிகளாக இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். மலையாளத்தில் ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் பெற்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த திரைப்படம்.

இந்த படத்தை தயாரிப்பது மட்டுமல்லாமல் தர்ஷனின் அப்பாவாகவும் நடித்து வருகிறார் கே எஸ் ரவிக்குமார். தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தினை சரவணன் மற்றும் சபரி என இருவர் இணைந்து இயக்கி வருகின்றனர். ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். யோகி பாபு, யூடியூப் பிரபலம் ராகுல் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.